Thursday, April 8, 2021

Instant puliyothirai in Tamil version (இன்ஸ்டன்ட் புளியோதரை பவுடர்*)


 *தேவையான பொருள்கள்*

 *ட்ரையாக வறுக்க வேண்டியவை*

 மல்லி இரண்டுஸ்பூன் 
 கடலை பருப்பு இரண்டு ஸ்பூன்
உளுந்தம்பருப்பு இரண்டுஸ்பூன்
 மிளகு ஒரு ஸ்பூன்
 சீரகம் ஒரு ஸ்பூன்
 வெள்ளை எள் இரண்டு ஸ்பூன் 
வெந்தயம் முக்கால் ஸ்பூன் 
வரமிளகாய் எட்டு 
ஒரு அரை ஸ்பூன் நல்லஎண்ணெய் விட்டு ஒரு எலுமிச்சை அளவு புளியை வறுத்து எடுத்து கொள்ளவும்.

வெல்லம் ஒருஸ்பூன்
 உ ப்பு தேவையான அளவு 

 *தாளிக்க வேண்டியவை*
 நல்ல எண்ணெய் நான்கு ஸ்பூன்
 கடலை பருப்பு ஒரு ஸ்பூன்
 உளுந்து பருப்பு ஒரு ஸ்பூன்
 நிலக்கடலை ஒரு ஸ்பூன்
 கருவேப்பில்லை சிறிது
 கடுகு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் அரைஸ்பூன்
 பெருங்காயம் ஒரு ஸ்பூன்
 வரமிளகாய் இரண்டு

*செய்முறை*

 வறுக்க சொன்ன பொருள்களை ஆறவைத்து மிக்சியில் பவுடர் ஆக்கவும்.

  பின் வெல்லம், உப்பு சேர்த்துமிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

 பிறகு   அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிப்பு சாமான்கள் ஒவ் வென்றாக சேர்த்து கடைசியில் மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்க்கவும்.

 பின் அடுப்பை அணைத்து விட்டு மிக்சியில் வைத்துள்ள பொடியை போட்டு கிளறவும். 

 *புளியோதரை மிக்ஸ் ரெடி*

 பிறகு சாதம் உதிரியாக வடித்து ஒரு ஸ்பூன் நல்லஎண்ணெய் விட்டு ஒரு பேசினில் கொட்டி கிளறிவிடவும்.

 பின் தேவைக்கு ஏற்ப கலந்து வைத்துள்ள பொடியை போட்டு கிளறவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும்.

 புளியோதரை மிக்ஸை ஒரு டப்பாவில் வைத்து ப்ரிட்ஜ்ல் வைத்து ஒரு பதினைந்து நாட்கள் வைத்து கொள்ளலாம்.

 ஒரு உழக்கு சாதத்திற்கு இரண்டரை ஸ்பூன் கரைட்டாக இருக்கும் .தேவை எனில் மூன்று ஸ்பூனாக போட்டு கிளறவும்.

  

1 comment: